;
Athirady Tamil News

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு மீட்பு…!! (படங்கள்)

0

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டின் அருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நில மட்டத்திலிருந்து 4 அடி ஆளத்தில் குறித்த குண்டு காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 10 =

*