;
Athirady Tamil News

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமைக்கான காரணம் என்ன..!!

0

ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் ஏன் நீக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை பொது மன்னிப்பின் கீழ் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை தயாரிப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜெனிவாவிற்கான ஸ்ரீலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஜெனிவாவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி வழங்கிய அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமைக்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 13 =

*