;
Athirady Tamil News

கஹதுவ வீதியில் விபத்தில் தாயும் மகளும் பலி…!!

0

மாபலாகம, கஹதுவ வீதியில் அபகஹவில சந்தியில் ஏற்பட்ட விபத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (20) இரவு முச்சக்கர வண்டியொன்று பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ இயந்திரத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி ஓட்டுனரையும் அதில் பயணித்த 2 பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளையும் நியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக 2 பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அதில் ஒரு தாயும் அவருடைய மகளும் உயிரிழந்துள்ளளனர்.

தல்கஸ்வல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணும் அவருடைய 5 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொக்கோ இயந்திரத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − nine =

*