;
Athirady Tamil News

ஸ்ரீலங்காவில் வினோதம்; கள்வனின் செயலால் துள்ளிக்குதித்த பொலிஸ்..!!

0

மாத்தறை முலடியன பிரதேசத்தில் கொள்ளையர்கள் ஹாட்வெயார் கடை யொன்றை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் ஏனைய பொருட்களை திருடிச்சென்றுள்ள காணொளி வெளியாகியுள்ளது. குறித்த கொள்ளையில் ஈடுபட்ட நபரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

இரும்புக் கடை ஒன்றை உடைத்த கொள்ளையர், அதிலுள்ள பணத்தைக் கொள்ளையிட்டார். குறித்த கொள்ளையில் 117000 ரூபா பணம் திருட்டுப்போயுள்ளதாக கடை உரிமையாளர் மாவரல்ல பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட மாவரல்ல பொலிஸார், கடையின் CCTV கமெரா காட்சிகள் மூலம் நேற்று கொம்பந்தல பிரதேசத்தில் ஒருவரைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம்மிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே ஈடு வைத்த நகை ஒன்று, கடையில் திருடப்பட்ட பணத்திலிருந்து 36225 ரூபா கொடுத்து திருப்பப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர், தனது மோட்டார் சைக்கிளுக்காக செலுத்தப்படவேண்டிய தவணைத்தொகை 15000 ரூபாவும், தொலைக்காட்சிப் பெட்டிக்காக செலுத்தவேண்டிய தவணைத்தொகை 14000 ரூபாவும் அந்த திருட்டுப் பணத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மிகுதி 40000 ரூபா சந்தேக நபரடைய வீட்டில் இருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

30 வயதுடைய திருமணமான இவர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்று பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*