;
Athirady Tamil News

வவுனியாவில் 154வது பொலிஸ் வீரர்கள் தினம்…!! (படங்கள்)

0

உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 154வது பொலிஸ் வீரர்கள் தினம் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபக்தி தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே இன்று காலை 8.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவு தூபிக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசத்திற்காக மரணத்த பொலிஸாரினை நினைவு கூறும் இந்நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.எஸ் தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிரி பர்னான்டோ, பொலிஸ் ஆட்சேர்ப்பு உதவியாளர் மல்லவகே, பொலிஸ் கண்காணிப்பாளர் வெல்கம, கணக்காளர் ரவிச்சந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயிர்நீத்த பொலிசாரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், வவுனியா பொலிஸார், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + six =

*