;
Athirady Tamil News

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனையை உறுதி செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்..!!

0

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஜைனப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்தது. சிறுமியின் உடல் ஜனவரி 9-ம் தேதி இரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜைனப்பின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இம்ரான் அலி என்பவர், அந்த சிறுமியை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை, கடத்தல் மற்றும் கற்பழித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த மாதம் முகமது அலிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இம்ரான் அலி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கருணையின் அடிப்படையில் தண்டனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இம்ரான் அலியின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இம்ரான் அலியின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − nine =

*