;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு..!!

0

பாகிஸ்தானில் மலைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்அப் டிரக் இன்று விபத்தில் சிக்கியது. சங்லா மாவட்டம் சகாரனோ என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிய டிரக், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அல்புரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை மிகவும் மோசமானதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ஸ்வாத் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*