;
Athirady Tamil News

டிரம்ப், கிம் சந்திப்பில் நாங்களும் இடம்பெற வேண்டும் – தென்கொரியா விருப்பம்..!!

0

அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரிய அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர்த்த வைத்தார்.

பேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது. கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய பிரதிநிதிகளுக்கு கிம் அளித்த விருந்து

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை அமெரிக்கா – வடகொரியா இடையே மட்டும் இருக்கக்கூடாது, எங்களையும் சேர்த்து முத்தரப்பு பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும் என தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட அணு ஆயுத பதற்றத்தை தணிக்க வேண்டுமானால் இந்த பேச்சுவார்த்தை எங்களையும் சேர்த்து மூன்று தரப்பாக இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டிய அவர், அப்போது இரு நாடுகளுக்கும் இருந்த பதற்றம் அந்த பேச்சுவார்த்தையில் குறைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − ten =

*