;
Athirady Tamil News

தேர்தலில் கடாபியிடம் நிதியுதவி – பிரான்ஸ் முன்னாள் அதிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை..!!

0

பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி இயக்கத்தை சேர்ந்த நிக்கோலஸ் சர்க்கோசி வெற்றி பெற்றார்.

2012-ம் ஆண்டுவரை அந்த பதவியில் நீடித்த அவர் தேர்தல் செலவுக்காக லிபியா முன்னாள் அதிபர் முவம்மர் கடாபியிடம் நிதியுதவி பெற்று அதன் மூலம் வெற்றி பெற்றதாக பிரான்ஸ் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளும், பிரபல முன்னணி ஊடகங்களும் குற்றம்சாட்டி வந்தன.

பின்னர் வந்த அரசு கடந்த 2013-ம் ஆண்டு இதுதொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டது. மறைந்த முவம்மர் கடாபியின் மகனான செய்ப் அல்-இஸ்லாம் என்பவரும் இந்த விசாரணையில் வாக்குமூலம் அளித்தார். தனது தந்தையிடம் இருந்து தேர்தல் செலவுக்கு நிக்கோலஸ் பணம் பெற்றது உண்மைதான் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு, வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மற்றும் வரிஏய்ப்பு விசாரணைத்துறை போலீசார் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசியிடம் நேரடியாக விசாரணை நடத்த தீர்மானித்தார்.

இதைதொடர்ந்து, நான்டெர்ரி பகுதியில் உள்ள விசாரணை அலுவலத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நிக்கோலஸ் சர்க்கோசி ஆஜர் ஆனார். நள்ளிரவுவரை அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவரது அமைச்சரவையில் முன்னர் இடம்பெற்றிருந்த பிரைஸ் ஹோர்ட்டேபியூக்ஸ் என்பவரிடமும் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று பின்னிரவு போலீசாரால் விடுவிக்கப்பட்ட நிக்கோலஸ் சர்க்கோசி இன்று காலை மீண்டும் போலீசார் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்னாள் அதிபரிடம் அதிகபட்சமாக 48 மணிநேரம் வரையில் விசாரணை நடத்த இயலும். அதற்குமேல் அவரை விடுவித்து, பின்னர் விசாரணைக்கு அழைப்பு அனுப்ப வேண்டும். அல்லது, விசாரணையின் அடிப்படையில் திரட்டிய விபரங்களுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*