;
Athirady Tamil News

டெல்லி விமான நிலயத்தில் ரூ.1.4 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது..!!

0

டெல்லி சர்வதேச விமான நிலைத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் இன்று வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்தனர்.

அப்போது, தம்மாம் நகரில் இருந்து வந்த ஒரு பயணி எமர்ஜென்சி லைட் பேட்டரிக்குள் 40 தங்கக் கட்டிகளை பதுக்கி கடத்திவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சுமார் 2.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இதேபோல், துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணி அட்டை பெட்டிகள் மற்றும் புத்தகப் பைகளுக்குள் வைத்து மறைத்து கடத்திவந்த 1.9 கிலோ எடையுள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

அவர்கள் இருவரிடம் இருந்தும் இன்று கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*