;
Athirady Tamil News

யோகி ஆதித்யநாத் அரசுக்கு 12 மாதங்களில் 14 மனித உரிமை ஆணைய நோட்டீஸ்..!!

0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் மனித உரிமை ஆணையம் உ.பி. அரசுக்கு 14 நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல நோட்டீஸ் உத்தரப்பிரதேச மாநில போலீசார் காசியாபாத் மற்றும் நொய்டா பகுதியில் நடத்திய போலி எண்கவுண்டர்களுக்காக அனுப்பப்பட்டது. குறிப்பாக கிரேட்டர் நொய்டா பகுதியில் சுமித் குஜார் கொல்லப்பட்டது. என்கவுண்டர் என்ற பெயரில் மனித உரிமை மீறப்பட்டதாக இவ்வாணையம் குற்றம் சாட்டியது. ஆனால் யோகி ஆதித்யநாத் போலீசாருக்கு சாதகமாக பேசி வருகிறார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீஸ் படையை உபயோகப்படுத்தியது, கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது மற்றும் ஜான்சி மருத்துவ கல்லூரியில் விபத்தில் காலிழந்த நோயாளின் காலை அவருக்கு தலையணையாக வைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும்.

மிகவும் முக்கியமான சம்பவம், ஜனவரி மாதம் ஷகரான்பூரின் விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் மறுத்துவிட்டனர். தங்கள் காரில் ரத்தக் கறை படிந்துவிடும் என்பதால் வாலிபர்களை காப்பாற்ற மறுத்துவிட்டனர். இதனால் 2 வாலிபர்களும் உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகள் கடத்தப்பட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு இளம் ஜோடியை போலீசார் பிடித்து தனித்தனியாக லாக்கப்பில் அடைத்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வயதை எட்ட வில்லை என கூறினர். காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அந்த பெண்ணை கற்பழித்தனர். ஆனால் போலீசார் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. அதன் பின் நீதிமன்றம் இருவரும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்ள தகுதியடைந்தவர்கள் எனத் தீர்ப்பளித்தது. ஆனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

யோகி அரசு தனது ஓராண்டு நிறைவை கொண்டாடி வரும் நிலையில் அவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 14 நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*