;
Athirady Tamil News

தேர்தல்களில் மூக்கை நுழைத்தால்? – பேஸ்புக்கை எச்சரிக்கும் மத்திய மந்திரி..!!

0

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26-ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவி ஷங்கர் பிரசாத், “அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூக்கை நுழைக்க நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

மேலும், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + thirteen =

*