;
Athirady Tamil News

மாவீரர்கள் நினைவேந்தலுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பதவியேற்பு…!! (படங்கள்)

0

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது தலைவர்கள் முன்னதாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியோ மாவீரர்களிற்கு அஞ்சலித்து அவர்கள் நினைவுகளை மனதிலேற்றி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நல்லூரிலுள்ள தியாகி திலீபன் தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னணியின் சர்வதேச அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் தெரிவாகிய உறுப்பினர்கள் முதலில் சுடரேற்றி அஞ்சலித்த பின்னர் சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டனர்.

கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் முதலாவது தேர்தல் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டபோது வேட்பாளர்கள் அனைவரும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் கல்லறைகளை அஞ்சலித்து மாவட்ட செயலகம் சென்றிருந்ததை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் நினைவு கூர்ந்தார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 5 =

*