;
Athirady Tamil News

பொலிஸார் துரத்திய போது ஆற்றில் குதித்தவர் சடலமாக கண்டெடுப்பு…!!

0

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போது ஆற்றில் குதித்த இளைஞன் இன்று (புதன்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா, மணலாற்றில் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை தாம் கண்டெடுத்ததா கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் கிண்ணியா, பைஸல் நகரைச் சேர்ந்த எம்.ரணீஸ் (வயது 17) என்பவருடையது என அடையாளங்காணப்பட்டது.

நேற்று கிண்ணியா மகாவலி ஆற்றுப் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வை சோதனை செய்வதற்காக பொலிஸார் சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்டிருந்தபோது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சிலர் தப்பியோடிய வேளையில் குறித்த இளைஞன் ஆற்றில் குதித்தார்.

இந்நிலையில் தேடப்பட்டுவந்த குறித்த இளைஞன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*