;
Athirady Tamil News

சிரியா மார்க்கெட் பகுதியில் மோர்ட்டார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு..!!

0

மத்திய கிழக்கு நாடுகள் நேற்று அன்னையர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடிவந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள பிரதான மார்க்கெட் பகுதியில் நேற்று மோர்ட்டார் ரக வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அரசுக்கு ஆதரவான படை வீரர்கள் 11 பேரும், பொதுமக்களில் சிலரும் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர் நேற்று தகவல்கள் வெளியானது. கிழக்கு கவுட்டா பகுதியில் உள்ள போராளி குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக அரசுதரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − eight =

*