;
Athirady Tamil News

பெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் – 1943, மார்ச் 22..!!

0

வரலாற்றில் மிக அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது இரண்டாம் உலகப்போர். 1943-ம் ஆண்டு இந்த உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள காட்டின் என்ற கிராமத்திற்குள் மார்ச் 22-ம் தேதி நாசி படையினர் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர்.

கிராமங்களில் உள்ள வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினர். வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் அனைவரும் எந்திர துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோல் நாசி படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் பல கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். நாசி படையினரின் ஆதிக்கத்தில் இருந்த மூன்று ஆண்டுகளிலும், அந்த நாட்டில் சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேநாளில் வரலாற்றில் இடம்பெற்ற பிற நிகழ்வுகள் வருமாறு:-

1939 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, லிதுவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1960 – ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி செனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்பை அறிமுகம் செய்தது.

2005 – தமிழ்த் திரையுலக நடிகர் ஜெமினி கணேசன் மறைவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + seventeen =

*