;
Athirady Tamil News

பெண்களின் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் கைது…!!

0

வவுனியாவில் பெண்களின் மோட்டார் சைக்கிளில் திருடிய இருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்…..

வவுனியாவில் முக்கிய பகுதிகளான வைத்தியசாலை நீதிமன்றம் பாடசாலைகள் போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை உடைத்து பணம் தொலைபேசிகள் போன்றனவற்றை திருடிய குற்ற சாட்டிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலீஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே, வவுனியா சாந்தசோலை ,அண்ணாநகர் பகுதிகளை சேர்ந்த 23 வயது மதிக்க தக்க இளைஞர்களை நேற்று கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் அவர்களிடமிருந்து 15 பெறுமதி மிக்க தொலைபேசிகளையும், 30 ஆயிரம் ரூபாய் பணம் 2 சாரதி அனுமதி பத்திரங்கள், வங்கி அட்டைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று (21-03-2018) வவுனியா மாவட்ட நீதிமன்றில் ஆயர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − seven =

*