வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் அசௌகரியம்..!!

வவுனியா, புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக் கொள்பவர்கள், அதனை அப் பேரூந்து நிலையப் பகுதியில் உள்ள பொதுவெளியில் வைத்து பயன்படுத்துவதால் அங்கு வந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பலரும் அதன் புகையை சுவாசிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் பலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விட்டுள்ளதுடன், குறித்த பேரூந்து நிலையத்திற்குள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.