;
Athirady Tamil News

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மார்க் விடுத்துள்ள மிக முக்கியமான அறிவிப்பு…!!

0

பேஸ்புக் பயனாளிகள் தம்மீது வைத்த நம்பிக்கைக்கு எதிராக தாம் செயற்பட்டதாக பேஸ் புக் நிறுவனத்தின் தலைவர், மார்க் சக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையே அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

50 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கேம்பிரிஜ் ஆய்வுக்குழுவினால் வெளியாக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சக்கர்பேர்க், மிகப்பெரிய நம்பிக்கை முறியடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் ‘அறுவடை’ செய்யப்படுகின்றமைக்கு எதிராக புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர்,

”பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது. அவ்வாறு பாதுகாக்க முடியாத பட்சத்தில், எங்களால் சேவை வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை அறுவடை செய்த எப் எனப்படும் செயலிகள் தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய செயலிகளை உருவாக்குகின்றவர்கள், பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசிக்கும் எல்லையை வரையறை செய்யவும், பல்வேறு தடைகளை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − ten =

*