;
Athirady Tamil News

சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்த மஹிந்த; சபையில் நடந்த சுவாரஷ்யம்…!!

0

எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் ஆசனத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிறிதுநேரம் அமர்ந்திருந்த விவகாரம் அரசியல் மட்டத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் கூடியது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், தனது சகாக்களுமான பிரசன்ன ரணவீர மற்றும் சனத் நிஷாந்த ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சபைக்கு நேற்று விஜயம் செய்திருந்தார்.

சடுதியான எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் ஆசனத்தை நோக்கி நடந்த மஹிந்த ராஜபக்ச, அவரது ஆசனத்தில் சில மணிநேரம் அமர்ந்து ஏனைய உறுப்பினர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், அதன் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் சபையில் இருந்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மஹிந்த ராஜபக்ச தனது ஆசனத்தில் அமராமல், தவறுதலான இரா. சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்த விடயத்தை அவதானித்த படைக்கள சேவிதர்கள், உடனடியாக சனத் நிஷாந்த எம்.பியின் காதுகளுக்கு அதனை கூறினர்.

உடனடியாக விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மஹிந்த ராஜபக்ச அமர்ந்த தவறுதலான இடத்தை தெளிவுபடுத்தியதை தொடர்ந்து தனக்கான ஆசனத்தை சென்றடைந்து அமர்ந்தார்.

இந்த சொற்ப நேரத்திற்குள் மஹிந்த ராஜபக்சவின் தவறை கண்டுபிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான லக்ஷ்மன் கிரியெல்ல அவரிடம் வந்து, அரசியலில் இருந்து ஓய்வுபெறும் வேளை நெருங்கிவரும் நிலையில் தனக்கான ஆசனத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் தவறிவிட்டீர்களே என்று சிரித்தபடி கண்டலடித்துள்ளார்.

இதற்கு சிரித்தபடியே பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த ஆசனத்தை காண்பித்தது வேறு யாரும் இல்லை, ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கதான் என்று தெரிவித்துள்ளாராம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + fifteen =

*