;
Athirady Tamil News

அமெரிக்கா செல்ல ராஜபக்சவுக்கு தடை;மொஸ்கோவில் நடந்த சங்கடம்…!! (படங்கள்)

0

ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணிக்க முயற்சித்த முன்னாள் ஜனாதிபித மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு விமான நிலையத்தில் வைத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணத்தை இடைநடுவே நிறுத்திவிட்டு நாடு திரும்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடமான நிலை தொடர்பில் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

அண்மையில் நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மொஸ்கோவுக்கு சென்றிருந்தார்.

அங்கு பணிகள் முடிவுற்ற பின்னர் மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

எனினும் விமான நிலையத்தில் வைத்து எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்தினால் தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ச ருவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக நாடு திரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய ஆலேசனையின்படி தனக்கான அனுமதியை எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவன அதிகாரிகள் மறுத்ததாகவும், எனினும் தனக்கு இதுபற்றி முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி குறிப்பிட்டிருக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − three =

*