;
Athirady Tamil News

தந்தையுடன் சண்டை பிடித்து மகன் செய்த காரியம்; கெஞ்சிக் கூத்தாடிய பொலிஸ்…!!

0

இலங்கையின் தெற்கே மாத்தறை மாவட்டம் கெக்கனந்துர, பரவாஹெர பகுதியில் இளைஞர் ஒருவர் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றின் மீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தந்தையுடன் ஏற்பட்ட தகராறே இந்த போராட்டத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

21 வயதுடைய குறித்த இளைஞரை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர் என்றும் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது என்றும் அங்கிருக்கும் எமது களநிலைச் செய்தியளர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையுடன் குறித்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 200 அடி உயரத்தினை கொண்ட தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றின் மீதே இந்த வினோத போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாம் விரைந்து சென்றதாகவும் அதன்போது குறித்த இளைஞரிடம் கீழே இறங்குமாறு எவ்வளவோ கெஞ்சியும் அவர் இறங்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஐந்து மணித்தியாலத்திற்கு அதிகமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் அவருக்கு உடனடியாக அவருக்க உணவு வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டு மாத்தறை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*