;
Athirady Tamil News

23 நாட்களாக முற்றாக செயலிழந்த ஸ்ரீலங்கா பல்கலைக்கழங்கள்…!!

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இன்று வியாழக்கிழமையுடன் 23 நாட்களாகின்றன.

இந்த நிலையில் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தௌிவுப்படுத்திய போதிலும் அதற்கு தீர்வு கிடைக்காமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தயால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்ததை போன்று சாதகமான பதில் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15,000 இற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் கொழும்பு உட்பட நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை அன்றாட செயற்பாடுகளும் தடைபட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eighteen =

*