;
Athirady Tamil News

இனவாதத்தை பரப்ப பலர் முயற்சி; நடவடிக்கை எடுக்கப்படும் – மனோ…!!

0

இனங்களுக்கு இடையிலான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பலர் இனவாத கருத்துக்களை, பரப்பி வருவதாக தேசிய சகவாழ்வு அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இனங்களுக்கிடையிலான தெளிவின்மையே, கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு கணணிகள் வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன்,

வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 3 =

*