;
Athirady Tamil News

சேலம் அருகே வாலிபரை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்..!!

0

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அம்மன்கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் மதனகோபால். இவருக்கு மாணிக்கம், ராஜி (வயது 42), ராமு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் 2-வது மகன் ராஜிக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10 வருட காலமாக கூலி வேலைக்கு சென்று விட்டு அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலில் படுத்து தூங்குவது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவு ராஜி முனியப்பன் கோவில் வரண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அங்கு வந்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ராஜியின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்தனர். அவரது உடலில் உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்து விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ராஜி கொலை செய்யப்பட்ட தகவல் இன்று காலையில் ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. தகவலை கேள்விப்பட்டு பொதுமக்கள் ஏராளமானோர் கோவில் முன்பு கூடினர்.

இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜி உடலை பார்வையிட்டு கொலை குறித்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. போலீசார், மோப்ப நாயை மோப்பம் பிடிக்க ஏவி விட்டனர். அது முனியப்பன் கோவில் முழுவதும் சுற்றி சுற்றி வந்தது.

பின்னர் அங்கிருந்து வயல்காடு வழியாக சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து ராஜி உடல் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவிலில் தூங்குவதை பார்த்து முன்விரோதம் காரணமாக அவரை மர்ம கும்பல் தீர்த்துகட்டியதா? அல்லது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*