;
Athirady Tamil News

யாழ் – கொட்டடி பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு உதவி..!! (படங்கள்)

0

யாழ் கொட்டடிப்பகுதியில் வெள்ளாந்தெருவில் கணவன் இழந்த நிலையில் தனது 3 ஆண் பிள்ளைகளையும் கஸ்டத்தின் மத்தியில் வளர்த்து வரும் சத்தியசீலன் சுபாசினி என்பவருக்கு யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி வசந்தி மேற்கொண்ட முயற்சியால் தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் நா. இராஜமனோகரன் வீ 3 பவுண்டேசனுடன் தொடர்பு கொண்டதையடுத்து இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்கள் அளவற்ற பாதணிகளை கால் வெட்டும் நிலையில் பாடசாலைக்கு அணிந்து செல்லுதல் ,காலை உணவின்றி பாடசாலைக்கு செல்லுதல் , கிழிந்த புத்தகப்பைகளைப்பயன்படுத்தி வரல் என்பன மட்டுமன்றி 3 வேளை உணவுக்கு கஸ்டப்படும் நிலையில் குடும்பம் உள்ளது.

தாய் சுபாசினி சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தில் நாளாந்தம் வேலை செய்து உழைத்து வந்த போதிலும் அங்கிருந்த அசௌகரிய நிலை அவரை வேலையை தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.

தற்போது குடும்பம் கடும் வறுமை நிலைக்கும், விரக்தி நிலைக்கும் தள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை உபகரணங்கள் ஒரு மாத உலர்உணவுகள் என்பன வீ-3 அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது .

வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன் , வீ – 3 பவுண்டேசன் உறுப்பினரும் வவுனியா தொழில் நுட்பக்கல்லூரி விரிவுரையாளருமான அ. தவீசன் ஆகியோர் நேரடியாகச்சென்று இந்த உதவிகளை வழங்கி வைத்தனர் .

மேலும் இந்த குடும்பத்திற்கு அவசர தேவைகள் பல உள்ளமையினால் உதவும் உள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 11 =

*