;
Athirady Tamil News

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை உத்தரவு..!!

0

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

இதனை அடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்து விடுவார் என ஜாமீனுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கடந்த 16-ம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், நாளை அம்மனு மீது உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 13 =

*