;
Athirady Tamil News

டி.ஜி.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்கள் கைது..!!

0

சென்னை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தின் வெளியே நேற்று மாலை தேனி மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள ரகு, கணேஷ் ஆகியோர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர்.

இதனை கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக பணி ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், எங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், இடமாற்றம் செய்கின்றனர். சாதிரீதியாக தங்களை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்கின்றனர் என அடுக்கடுக்காக புகார் கூறினர்.

இந்நிலையில், தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை போலீசாரையும் இன்று சென்னை மெரினா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − seven =

*