;
Athirady Tamil News

மட்டக்களப்பில் 996 வீடுகளில் டெங்கு சோதனை…!!

0

இலங்கையில் டெங்கு நோய் வேகமாக பரவும் இரண்டாவது மாவட்டமாக இனங்கானப்பட்டுள்ள மட்டக்களப்பில், பொது சுகாரதார பரிசோதகர்கள் டெங்கு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி கிராம சேவகர் பிரிவில் உள்ள சுமார் 996 வீடுகளில் இன்று (வியாழக்கிழமை) டெங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 153 இடங்கள் டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் காணப்பட்ட 8 இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குதாக்குதல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பிரிவிற்குட்பட்ட கல்லடி, திருச்செந்தூர், கல்லடிஉப்போடை போன்ற கிராமங்களில் இச்சோதனை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை, சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, கடற்படையினார், பொலிசார,; பொது சுகாதார பரிசோதகார்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 1 =

*