;
Athirady Tamil News

ரணவிரு குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் ஏற்பாடுகள் தீவிரம்..!!

0

ரணவிரு சேவா’ அதிகார சபையினால் மூவின மக்களுக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 39 வீடுகளை இன்று (வியாழக்கிழமை) மேற்பார்வை செய்ய சென்றிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே இந்த வீடுகளை சிறந்த முறையில் தங்களது முழுப் பங்களிப்போடு நிர்மாணித்திருப்பதையிட்டு அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் தலா 19 வீடுகள் தமிழ் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை பார்வையிட சென்ற, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி தலைமையிலான குழுவில், ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் பொருளாளர் ஏ. லிங்கராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − two =

*