;
Athirady Tamil News

சிவ­னொ­ளி­பா­த­மலை யாத்­திரை பருவ காலம் வெசாக் பண்­டி­கை­யுடன் நிறைவு…!!

0

சிவ­னொ­ளி­பா­த­மலை யாத்­திரை பரு­வ­காலம் எதிர்­வரும் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வரு­கின்ற பூரணை தினத்­துடன் கூடிய வெசாக் பண்­டி­கை­யோடு நிறைவு பெற­வுள்­ளது. வழ­மை­யாக மே மாதத்தில் வரு­கின்ற வெசாக் பண்­டிகை இம்­முறை ஏப்ரல் மாதத்தில் வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­கது.

எனவே, வழ­மை­யாக டிசம்பர் மாத நடுப்­ப­கு­தியில் அல்­லது பிற்­ப­கு­தியில் வரு­கின்ற பூரணை தினம் கடந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திக­தியே வந்து விட்­டதால் 2018 ஆம் ஆண்­டுக்­கான சிவ­னொ­ளி­பா­த­மலை பருவ காலமும் அன்­றைய தினமே அதா­வது ஒரு மாதத்­துக்கு முன்­னரே ஆரம்­ப­மாகி விட்­டது.

வழமை போல, ஜன­வரி, பெப்­ர­வரி, மார்ச் மாதங்­களில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு வருகை தரும் யாத்­தி­ரிகர் தொகை அதி­க­ரித்து காணப்­பட்­ட­தோடு, வார இறுதி நாட்­களில் 2 – 3 இலட்சம் வரை யாத்­தி­ரி­கர்­களின் வரு­கையும் அதி­க­ரித்­தி­ருந்­தது.

யாத்­தி­ரி­கர்­களின் வசதி கருதி இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை விசேட பஸ் சேவை­களை நடத்தி வரு­கின்­றது. அத்­தோடு, அட்டன் – நல்­ல­தண்ணீர் புகை­யி­ரத இணைப்பு பஸ் சேவையும் இடம்­பெற்று வரு­கின்­றது.

இம்­முறை பொலித்தீன் பாவனை பெரு­ம­ளவு குறைந்­துள்ள அதே­நேரம், வெளி­யி­டங்­களில் இருந்து வருகை தரும் சில­ரி­ட­மி­ருந்து போதைப் பொருட்­களும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நீதிமன்­றத்தில் ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்­ளார்கள். 2019 ஆம் ஆண்டுக்கான பருவகாலம் மீண்டும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி பூரணை தினத்தன்று ஆரம்பமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*