;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள்..!!

0

விபத்துக்களை தவிர்க்க பயன்படும் வேகக் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் மிகவும் அதிகரித்திருப்பதாக SonntagsBlick எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வேகக் கட்டுப்பாட்டு பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் செல்லும் போது 30 KM வேகத்திற்கு மேல் நாம் வாகனங்களை இயக்கக் கூடாது என்பது போக்குவரத்து விதியாகும், இருப்பினும் அதிகளவு கட்டுப்பாட்டு பகுதிகளை அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு சர்ச்சை எழுந்துள்ளது.

St-Gallen மாகாணத்தில் மட்டும் 92 வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன, இவைகளில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 72 வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாய் அமைக்கப்பட்டுள்ளன.

Fribourg மாகாணத்தில் மட்டும் 172 வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது உள்ளன, ஆனால் இங்கு 2007-ம் ஆண்டுவரையில் வெறும் 56 வேகக்கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருந்தது.

இதேபோல் மற்றொரு இடமான Lucerne மாகாணத்தில் 234 வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக கூறிய அந்த செய்தி ஊடகம், இருப்பதிலேயே அதிகபட்சமாக Bern மாகாணத்தில் தான் 493 வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் 2007 மற்றும் 2017 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் 356 புதிய வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் நாள்தோறும் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று சுவிஸ் ஆட்டோமொபைல் கிளப் தலைவரான தாமஸ் ஹூட்டர் கூறியுள்ளார்.

ஆனால் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் தலைவர் கிறிஸ்டின் ஸ்டெய்ன்மான் கூறும் போது, இந்த வேகக் கட்டுப்பாட்டு பகுதிகளால் தெருக்களில் நடக்கும் விபத்துக்கள் வெகுவாக குறைந்து பாதுகாப்பான பயணத்துக்கு வித்திட்டுள்ளது, எனவே இது வரவேற்ககூடிய ஒன்று தான் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 9 =

*