;
Athirady Tamil News

16 முறை கருச்சிதைவு… 3 குழந்தைகள் உயிரிழப்பு: பிரித்தானிய முன்னால் மொடலுக்கு நேர்ந்த கொடுமை..!!

0

பிரித்தானியாவில் திருமணமான இளம்பெண் ஒருவருக்கு இதுவரை 22 முறை கருச்சிதைவு ஏற்பட்டு அவரது தாயாகும் கனவு சிதைந்து போயுள்ளது, குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ராசியில்லாதவர் என கூறியுள்ளனர்.

35 வயதான கெர்ரி பிரித்தானியாவின் முன்னாள் மொடல். திருமணம் ஆனது முதல் தாயாகு கனவுடன் இருந்து வந்த கெர்ரிக்கு திடீரென்று புற்றுநோய் தாக்கியது.

இந்த நிலையில் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்த கெர்ரி தனது முதல் குழந்தையை இழந்தார்.12 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருந்த கெர்ரியின் முதல் குழந்தை திடீரென்று உயிரிழந்தது

தொடர்ந்து புற்றுநோய்க்கான சிகிச்சையும் எடுத்து வந்த கெர்ரி, தாயாக வேண்டும் என்ற தீராத ஆசையால் தொடர்ந்து முயற்சித்தும் வந்துள்ளார்.

ஆனால் அவரக்கு குழந்தை தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்ட வண்ணமே இருந்துள்ளது.

குழந்தைக்காக தொடர்ந்து முயற்சிப்பதில் தவறேதும் இல்லை என மருத்துவர்களின் ஆலோசனைப்படி கெர்ரி பல முறை முயற்சி மேற்கொண்டுள்ளார். மட்டுமின்றி செயற்கை கருவுறுதல் தொடர்பாகவும் முயற்சித்துள்ளார்

2 மாதத்தில் கருவுற்ற கெர்ரிக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. 22 வாரத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணானது.குழந்தை மட்டுமல்ல, கெர்ரியின் குடியிருப்பு, வேலை மட்டுமல்ல நம்பிக்கையும் இழந்து தவித்தார் கெர்ரி.

தொடர்ந்து 16 முறை கருச்சிதைவு ஏற்பட்டு, பிறந்த 3 குழந்தைகள் உயிரிழக்க, பெரும் துயரத்துக்கு தள்ளப்பட்ட கெர்ரி, வாழ்க்கையில் இன்று அல்லது நாளை ஏதேனும் ஒரு வழியில் தாம் தாயாவேன் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 10 =

*