;
Athirady Tamil News

பார்ட்டியில் அளவுக்கு மீறி மது குடித்த 15 வயது சிறுவன்: மருத்துவமனையில் அனுமதி..!!

0

ஜேர்மனியில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் அளவுக்கு மீறி மது குடித்த 15 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.ஜேர்மனியின் Schopfheim பகுதியில் வார இறுதியை கொண்டாடும் வகையில் பார்ட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலரும் அளவுக்கு மீறி மது குடித்துவிட்டு கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர், இதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிலைமை கை மீறி போனதை உணர்ந்த பொலிசார் லேசான தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்த பார்ட்டியில் பலரும் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக 15 வயது சிறுவன் ஒருவன், மது போதையில் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மட்டுமின்றி, மீட்கப்பட்ட நபர்களில் அதீத மயக்கத்தில் இருந்த மற்றொரு நபரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் உடல்நிலை குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 11 =

*