;
Athirady Tamil News

பிரித்தானியாவில் தெருவில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த நிலைமை: சிசிடிவி காட்சியில் சிக்கிய குற்றவாளி..!!

0

பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை கண் மூடித்தனமாக தாக்கிவிட்டு அந்த சிறுமியிடமிருந்து செல் போனை திருடிச் சென்ற நபருக்கு மூன்று ஆண்டுகள் தண்டை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Derby பகுதியில் உள்ள Cambridge வீதியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் திகதி 12-வயது சிறுமி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நபர், திடீரென்று திரும்பி சிறுமியை தாக்கி, அவரிடமிருந்த செல் போனை பிடுங்கிவிட்டுச் சென்றான்

இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், அந்த வீடியோ இணையதளங்களி வைரலாகியது. அதுமட்டுமின்றி பிரித்தானியாவின் முக்கிய பிரபலங்களான Piers Morgan, Gavy Roslin, Nick Knowles மற்றும் Michael Vaughan ஆகியோரும் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து, இந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியிருந்தனர்.

அதன் பயனாக அந்த நபரை பொலிசார் கைது செய்தனர். அவன் பெயர் Patrik Gunar(22) எனவும் Slovakia-யாவைச் சேர்ந்த இவன் கடந்த 2010-ஆம் ஆண்டு Derby பகுதியில் வசித்து வந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது

இவன் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு போதை மருந்து விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அவன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான், அதன் பின் வழக்கை விசாரித்த நீதிபதி திருடிய குற்றத்திற்காகவும், அந்த சிறுமியை தாக்கிய குற்றத்திற்காகவும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்

இது குறித்து அந்த சிறுமி கூறுகையில், நான் மிகவும் மன வருத்ததில் இருந்தேன். என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி, குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய மக்களுக்கு நன்றி எனவும், உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிசாருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சிறுமியிடம் இருந்து திருடப்பட்ட போன் iPhone 6s என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 18 =

*