;
Athirady Tamil News

சுத்தம் செய்ய உள்ளே வந்த விலங்கு காப்பக ஊழியர்: கழுத்தை கடித்து குதறிய கிம்பா சிங்கம்..!!

0

மெக்சிகோவில் விலங்கு காப்பக ஊழியரை சிங்கம் கடித்து குதறியதால் அந்த நபர் பரிதாபமாக இறந்துள்ளார்.மெகிசிகோவில் Hidalgo மாகாணத்தின் Tulancingo பகுதியில் Nicolas Bravo என்ற பூங்க உள்ளது. இந்த பூங்காவில் ஊழியராக வேலை செய்து வருபவர் Gustavo Serrano Carabajal(28).

இவர் சமீபத்தில் அங்கிருக்கும் சிங்கத்தின் கூண்டினை சுத்தம் செய்வதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது உள்ளே சென்ற அவர், சிங்கம் இருக்கும் மற்றொரு கூண்டினை சரியாக பூட்டாமல் சுத்தம் செய்த படி இருந்துள்ளார்

அந்த நேரத்தில் உள்ள இருந்த கிம்பா என்ற சிங்கம் கூண்டினை திறந்து வெளியே வந்து Gustavo Serrano Carabajal-ன் கழுத்து பகுதியை கடித்துள்ளது.

இதைக் கண்ட சக ஊழியர்கள் சிங்கத்தை விரட்ட முயற்சி செய்துள்ளனர். இருந்த போதிலும் சிங்கம் விடாமல் அவரை கடித்த படி இருந்துள்ளது

அதன் பின் ஒரு கட்டத்தில் ஊழியர்களின் சாமர்த்தியத்தால், Gustavo Serrano Carabajal மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*