;
Athirady Tamil News

சர்வதேச தரத்தில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து கல்வி நிறுவனம்..!!

0

Times Higher Education (THE) என்னும் புகழ்பெற்ற அமைப்பு வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் EPFL federal technology institute என்னும் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல் இரண்டாவது இடத்தையும் சூரிச்சின் ETH technology institute பிடித்துள்ளது.

University of Geneva ஆறாவத் இடத்தைப் பிடித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன.

தர நிர்ணயத்திற்காக புவியியல் அமைப்பு, அரசுக் கொள்கைகள் அல்லது கலாச்சாரம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழகத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் வெளிநாட்டு ஆரிரியர்கள், மாணவர்கள் மற்றும் நாடுகளுக்கிடையேயான ஆய்வு ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது.

முடிவுகளை அறிவித்த THE, சுவிட்சர்லாந்து முன்னணியில் நிற்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து ஐந்து நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதையும் ஐரோப்பாவின் மையத்தில் அது இருப்பதையும் THE சுட்டிக்காட்டியுள்ளது.Lausanneஐ மையமாகக் கொண்டுள்ள EPFL, நூற்றுக்கு 97.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பொறியியல் துறையில் முன்னணியில் நிற்பதாக பாராட்டப்படும்அது உயிர் அறிவியல் துறையிலும் முன்னேறி வருகிறது.

இம்முறை THE தனது ஆய்வுக்காக பல்வேறு துறைகளை கருத்தில் கொண்டது. அந்த வகையிலும் சுவிட்சர்லாந்து நன்கு செயல்பட்டிருந்தது.

கலை, மனிதவியல் முதல் வர்த்தகம், பொருளியல் வரை அது அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது, ஆனால் மற்ற நாடுகளில் இவ்வாறு இல்லை. பிரித்தானியா பொறியியல், வர்த்தகம் மற்றும் மேலாண்மை, மற்றும் கணினி அறிவியலிலும் சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான், கலை, மனிதவியல் மற்றும் சமுக அறிவியலிலும் சிறந்து விளங்கின. ஆனால் இவை அறிவியலில் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிறந்தது எனக் கருதப்படும் Massachusetts Institute of Technologyயால் 30ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 4 =

*