;
Athirady Tamil News

மாமனார் உயிரை காப்பாற்ற தனது சிறுநீரகத்தை கொடுத்த மருமகன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

0

அமெரிக்காவில் சிறுநீரகங்கள் செயலிழந்த மாமனாருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மருமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போஸ்டனை சேர்ந்தவர் டோனி தரோசா (70). இவருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவரிடம் சென்று தரோசா பரிசோதித்த போது அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது தெரியவந்தது.

பின்னர் தரோசாவுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்த நிலையில் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தரோசாவின் ரத்த சொந்தங்கள் சிலர் தங்களது சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்தும் அது அவருக்கு பொருந்தவில்லை

ஆனால் அதிர்ஷ்டவசமாக தரோசா மகளின் கணவர் மைக்கேலின் சிறுநீரகம் அவருக்கு ஒத்து போனது.

இதையடுத்து பரந்த மனதுடன் மாமனாருக்கு தனது சிறுநீரகத்தை கொடுக்க மைக்கேல் முன்வந்தார்.இதையடுத்து உடனடியாக தரோசாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

அதே போல மைக்கேலும் நல்ல ஆரோக்கியதுடன் உள்ளார்.மைக்கேல் கூறுகையில், தரோசா எனது மனைவியின் அப்பா மற்றும் எனது குழந்தைகளின் தாத்தா ஆவார், அவர் உயிருக்கு ஆபத்து எனில் அது மொத்த குடும்பத்தையும் பாதிக்கும்.என் சிறுநீரகத்தை அவருக்கு கொடுத்தது மகிழ்ச்சியே என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + eighteen =

*