;
Athirady Tamil News

பாகிஸ்தான் குடியரசான நாள்: மார்ச் 23- 1956..!!

0

பாகிஸ்தான் 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி குடியரசு நாடானது. உலகின் முதன்முதலாக இஸ்லாமிய குடியரசானது பாகிஸ்தான் ஆகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1801 – ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். * 1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். * 1848 – நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர். * 1857 – எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். * 1868 – கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. * 1903 – ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

* 1919 – இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். * 1933 – ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது. * 1940 – முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது. * 1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். * 1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்தார். * 1965 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

* 1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது. * 1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு ராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது. * 1994 – சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர். * 1996 – தைவானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. * 2001 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*