;
Athirady Tamil News

பாராளுமன்றம் முடக்கம் எதிரொலி – எதிர்க்கட்சி தலைவர்களுடன் விஜய் கோயல் சந்திப்பு..!!

0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சனையில், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையில் அமளி நீடிப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில், பாராளுமன்றம் முடக்கப்படுவதை தடுக்கும் வகையில், காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய மந்திரி விஜய் கோயல் நேற்று சந்தித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. எனவே, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் அதிமுக தலைவர் மைத்ரேயன் ஆகியோரை சந்தித்தேன். பாராளுமன்றம் சுமூகமாக செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என கோரிக்கை விடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 15 =

*