;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு மகத்தான வரவேற்பு…!! (படங்கள்)

0

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்; விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவிற்கு இன்று மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நூக்கான் விமானப்படை விமானத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் தலைமையிலான உயர்மட்ட ராஜதந்திரிகள் வரவேற்றார்கள்.

இங்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நாளை இடம்பெறும். சமீப கால அரசியல் வரலாற்றில் இலங்கையின் இராஜ்ஜியத் தலைவர் ஒருவருக்கு இத்தகைய அழைப்புக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − six =

*