;
Athirady Tamil News

தியத்தலாவ குண்டுவெடிப்பு;விசாரணை அறிக்கை கையளிப்பு…!!

0

பதுளை தியத்தலாவ கஹகொல்ல பிரதேசத்தில் பேரூந்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை ஸ்ரீலங்கா இராணுவத் தலைமையகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதியினால் அமைக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு இந்த அறிக்கையை தயார் செய்து நேற்று கையளித்திருக்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் இராணுவச் சிப்பாய்கள் உட்பட 19 பேர் காயமடைந்திருந்தனர்.

பண்டாரவளை இடத்தை நெருங்கிய போது, குண்டு வெடிப்பதற்கு முன்னதாக இந்த பேருந்து தியத்தலாவ செல்லும் பயணிகளை வேறு ஒரு தனியார் பேருந்துக்கு மாற்றியதாக இராணுவம் தெரிவித்திருந்தது.

இராணுவ சிப்பாய் ஒருவர் குண்டு ஒன்றை மறைவாக வைத்திருந்த நிலையில் அது வெடித்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்ததோடு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*