;
Athirady Tamil News

சவூதியில் இலங்கைப் பணிப்பெண் படுகொலை: உடலம் இரு வாரங்களில்…!!

0

சவுதி அரேபியாவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் உடலம் இன்னும் இரண்டு வாரங்களுள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையூடாக வெளியாகியுள்ளது.

குறித்த பெண் கடந்த பத்தாம் திகதி சவூதி அரேபியாவின் புரைடா பகுதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தனக்கு தொழில் வழங்கியவரின் மகனாலேயே இவர் சுடப்பட்டார்.

இதேவேளை இவரது மரணபரிசோதனை மற்றும் மரண விசாரணை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், உடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 8 =

*