;
Athirady Tamil News

ஐ.நா பரிந்துரைகளை ஏற்க முடியாது பொன்சேகா…!!

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரான சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையானவை அல்ல என்று தெரிவித்தே முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.

ஸ்ரீலங்காவில் முப்பது வருடகாலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஒருசிலர் நாட்டிற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இதனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்கா மீது முன்வைத்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள தம்மால் முடியாது என்று யுத்தகாலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாக கடமையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முதன் முதலில் முன்வைக்கப்பட்ட போது அவற்றுக்கு உரிய பதில்களை வழங்கி அவற்றை முடிவுக்கு கொண்டுவருவதை விடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் அவற்றுக்கு பதிலளிக்காது சண்டித்தனம் செய்ததன் விளைவையே இன்று நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − eight =

*