;
Athirady Tamil News

பிரேரணைக்கு ஏட்டிக்குப் போட்டி; ரணிலுக்கு ஆதரவாக 100 கையெழுத்து…!!

0

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தை ஆரம்பத்திலேயே விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீழ்ச்சியான நிலை ஏற்பட்டிருக்காது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

முதல் தருணத்திலேயே இதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கையை பிரதமர் எடுத்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதமருக்கு ஆதரவாக இதுவரை 100 கையெழுத்துக்கள் பெறப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக தெரிய வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*