;
Athirady Tamil News

கோழித் திருடர் ஆடையைக் கழற்றிவிட்டு குடல் தெறிக்க ஓட்டம்; அதிர்ச்சிக் காரணம்…!!

0

கோழி பிடிக்கச் சென்று ஆடை இல்லாமல் நிர்வாணமாக ஓட்டமெடுத்த திருடன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் கண்டி மாவட்டத்தின் தும்பர பகுதியில் இடம்பெற்ருள்ளது.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. குறித்த கோழிகள் காலையில் திறந்துவிடப்பட்டு மாலையில் கூடுகளில் அடைக்கப்படுவது வழக்கம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கோழிகளை திருடர் ஒருவர் நீண்ட காலமாக அவதானித்து வந்துள்ளார். நன்றாக கொழுத்து வளர்ந்த நாட்டுக் கோழிகள் அவரது வாயில் நீர்சுரக்க வைத்துள்ளது என்றும் எப்படியாவது அவற்றைத் திருடி சமைத்துண்ணவேண்டும் என்ற பேராசை பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை குறித்த பகுதியில் மழை பெய்தபோது கோழிகளை பிடிப்பதற்கான சந்தர்ப்பம் திருடனுக்கு கைகூடி வந்துளது. இந்த நிலையில் குறித்த கோழிக் கூட்டை அணுகிய திருடன் அங்கிருந்த ஏழெட்டு கொழுத்த சேவல்களாகப் பார்த்து சாக்குப் பையினுள் பிடித்துத் திணித்துள்ளார். மழை பெய்த சத்தம் கோழிகளின் சத்தத்தைத் தடுத்தது.

கொழுத்த கோழிகள் கிடைத்த சந்தோசத்தோடு தப்பிச் செல்ல முயன்றவர் அங்குள்ள சிறிய பெட்டி ஒன்றுடன் மோதியுள்ளார். இவ்வாறு மோதியபோது அவற்றுள் வளர்க்கப்பட்ட தேனீக்கள் கலைந்து குறித்த நபர்மீது மொய்க்கத் தொடங்கின. ஆடைகளுக்குள்ளும் சென்ற தேனீக்கள் அங்கமெல்லாம் கொட்டத் தொடங்கின.

இதனால் வலி தாங்கமுடியாத குறித்த திருடன் கத்தியுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்ட வீட்டுக்காரர் வெளியில் வந்தபோது குறித்த திருடன் கோழியைக் கைவிட்டதோடு மட்டுமன்றி தனது ஆடைகளையும் கழற்றி எறிந்துவிட்டு குடல் தெறிக்க ஓடியுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்வையிட்ட வீட்டுக்காரர் சிரிப்போடு தமது கோழிகளை மீண்டும் கூட்டுக்குள் பிடித்து விட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மைக்காலமாக குறித்த பகுதியில் இடம்பெற்றுவந்த கோழித் திருட்டுடன் குறித்த நபருக்கும் தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகத்தில் பொலிஸார் வ்இசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*