;
Athirady Tamil News

கிராம மக்கள் முன்பாக மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்சகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில்ல் யார் தவறு செய்தாலும் போலீசிடம் புகார் அளிக்காமல் பஞ்சாயத்து மூலம் தீர்வு கண்டு வருகின்றனர். அதே போல், அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்துள்ளதாக அவர் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணிற்கு பஞ்சாயத்து தண்டனை வழங்கியது.

பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து அவரது கணவர் கொடூரமாக தாக்கி்னார். இந்த தாக்குதலை தடுக்காமல் சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரின் மகன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நூறுக்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 1 =

*