;
Athirady Tamil News

ஆங்கிலத்தில் பேசிய நண்பரை கொன்ற மும்பை வாலிபர்..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முகமத் அமீர் அப்துல் வாகித் ரகீன். இவருக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் அஃப்ரோஸ் ஆலம் சாகித் என்ற நண்பர் இருந்தார். சாகித் இரண்டு ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்தார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். சாகித் பள்ளி படிப்பை முடிப்பதற்காக இங்கு வந்தார். அவர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் பழக்கமுடையவர். ஆனால் ரகீன் படிக்காதவர். சாகித் எப்போழுதும் ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார். இது ரகீனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சாகித்தை கொலை செய்ய திட்டம் தீட்டினார் ரகீன். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இருவரும் ஒன்றாக வெளியே சென்றனர். அங்கு சாகித்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் ரகீன். அவருக்கு உயிர் போய்விட்டதா என்பதை உறுதி செய்ய 51 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சாகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து ரகீன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவர் தான் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். ரகீன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பேசிய குற்றத்திற்காக நண்பரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*