;
Athirady Tamil News

நீங்க எல்லாம், முள்ளிவாய்க்காலில் நிற்க்காதது எமது துரதிஸ்ரம்.. (VIDEO) -முகநூலில் இருந்து-

0


நீங்க எல்லாம் முள்ளி வாய்க்காலில் நிற்க்காதது எமது துரதிஸ்ரம் என்றே கூறவேண்டும்..

வெள்ளைக்காறனுக்கு முன் சிங்களவன் அடிக்க மாட்டான் என்று படம் காட்டுகிறீர்களா?

அல்லது வெளிநாட்டில் வைத்து ஆத்திரமூட்டினால். தாய் நாட்டில் இருக்கும் தமிழர்கள் மீது பழி தீர்ப்பான் அதை வைத்து குளிர் காயலாம் என்று நினைத்தீர்களா?

இப்படித்தான் 2011 இல் புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை விடுதலை செய்வதாக உறவினர்களுக்கு அறிவித்தல்வி டப் பட்டிருந்தது.

அன்நேரம் லண்டன் வந்த றாஜபக்ஸாவின் கார் மீது முட்டை வீசி அவமானப் படுத்தியதின் விளைவு. லண்டனில் இருந்தே அந்த விடுதலையை றத்து செய்தான்.

அதன் பிறகு சகல செய்திகளிலும் முகாமிலிருப்பவர்களின் விடுதலை றத்து.. உறவினர் பரிதவிப்பு.. ஐயோ..அம்மா…..அம்மம்மா…. என்றெல்லாம் எழுதினார்கள்.

உண்மையில் விடுதலையை தடுத்தது.. றாஜபக்ஸாவா? புலம் பெயர்ந்த தமிழரா ?

தாயகத்தில் இருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு புரிவதில்லை இந்த புலம் பெயர்ந்த பண முதளைகளின் உள்நோக்கம்.

அங்கு தீர்வு கிடைத்தால் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்தில் அடிவிழும் என்று தெரிந்த புலம் பெயர்ந்தவர்கள், தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போடுவார்களா?

இப்படியான இவர்கள் எமது தீர்வுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்று அப்பாவித் தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் தாயக மக்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயக மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பறவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருங்கள்.

எனது இந்தப் பதிவு. உள் நோக்கம் கொண்ட சிலரை ஆத்திரப்படுத்தும். அதனால் என்னை திட்டுவார்கள்.

குறிகிய வட்டத்துக்குள் இருப்பவனுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் அவனும் திட்டுவான்.

நல்ல சிந்தனையும் அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் இப்பதிவின் நோக்கம்.

https://www.facebook.com/100024256875357/videos/159220488229846/

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 16 =

*