;
Athirady Tamil News

காதலனைத் தேடிச்சென்ற இலங்கைப் பெண்ணுக்கு டெல்லியில் நேர்ந்த பரிதாபம்…!!

0

இந்தியாவின் தமிழ் நாட்டின் பெரம்பலுார் முகாமில் இருந்து காணாமல்போன, இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் புதுடில்லியில் பரிதாபகரமாக மரணமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பெரம்பலூர் அதிகளில் முகாமில் வசித்துவந்த ரம்யா என்ற பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார். 24 வயது ரம்யா பெரம்பலூர் அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போயிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 9ஆம் நாள் தொடக்கம் இவர் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போய் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை பதிவாகியிருப்பதும் டெல்லி பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

ரம்யா ஏன் காணாமல் போனதோடு மட்டுமன்றி டெல்லிக்குச் சென்றார் என்பது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்துள்ளனர். இதன்படி, ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளமையும் அவரைக் காண்பதற்காகவே டெல்லிக்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்ற ரம்யா, அங்கு ஒரு முகவர் மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக கடவுச்சீட்டு எடுக்க முயற்சித்துள்ளார். அதன்பின்னர் டெல்லிக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவும் தயாராகி இருக்கிறார்.

இவ்வாறு டெல்லியில் தங்கியிருந்த காலத்தில் மகிழுந்து ஒன்றில் பயணமானபோதே ரம்யா விபத்தில் சிக்கியுள்ளதாகவும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காதமையினால் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*